பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆங்கில ஆசிரியர்கள் வலியுறுதியுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆங்கில ஆசிரியர்கள் வலியுறுதியுள்ளனர்.
தமிழ்நாடு ஆங்கில மொழியாசிரியர் கழக கரூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்களாக அமைப்பின் மாநில இணைச் செயலர் கே. செங்குட்டுவன், மாநில துணைத் தலைவர் கே. சுரேஷ், மாநில மகளிர் அணி இணைச் செயலர் அபிராமசுந்தரி ஆகியோர் செயல்பட்டனர்.
தேர்தலில், மாவட்டத் தலைவராக என்.எஸ். நீலகண்டன், துணைத் தலைவராக எஸ். வடிவேல், செயலராக ப. காமாட்சி, இணைச் செயலராக விஜய், பொருளாளராக சுந்தரராஜ், ஒருங்கிணைப்புச் செயலர் ராமராஜ், ஆலோசகர் இளங்கோ, மகளிரணி தலைவி இந்திராணி, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள், ஒன்றியப் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக கருதி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.