புலியூர், வெள்ளியணையில் மே 14 மின் தடை
கரூரை அடுத்த புலியூர், வெள்ளியணை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 14) மின்சாரம் இருக்காது.
கரூரை அடுத்த புலியூர், வெள்ளியணை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 14) மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து கரூர் மின்பகிர்மான வட்டம், நகரிய செயற்பொறியாளர் மு. நூர்முகமது வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரூர் மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட புலியூர், வெள்ளியணை, காணியாளம்பட்டி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
Advertisement
Advertisement
எனவே, புலியூர் துணைமின் நிலையத்துக்குள்பட்ட புலியூர், எஸ்.பி. புதூர், எஸ். வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், ஆர்.என். பேட்டை, சணப்பிரட்டி, தொழிற்பேட்டை, மணவாசி, சாலப்ட்டி, மேலப்பாளையம், பாலராஜபுரம், உப்பிடமங்கலம், பொரணி, லட்சுமணம்பட்டி ஆகிய பகுதிகளிலும்,
வெள்ளியணை துணை மின் நிலையத்துக்குள்பட்ட வெள்ளியணை, செல்லாண்டிப்பட்டி, மணவாடி, பால்வார்பட்டி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, திருமலைநாதன்பட்டி, லந்தகோட்டை, பாளையம், ஜல்லிபட்டி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயபுரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி ஆகிய பகுதிகளிலும்,
காணியாளம்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட காணியாளம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரியப்பட்டி, சோனம்பட்டி, முத்துரெங்கம்பட்டி, ராசாங்கோவிலூர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது என்றார்.