கரூர்

அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தல்

அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

DIN

அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், வீரியபாளையம் ஊராட்சி கண்ணமுத்தாம்பட்டியில் வியாழக்கிழமை ஆதித்தமிழர் பேரவையின் கிளைக்கூட்டம் கிளை செயலாளர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளர் கோபால், தலைவர் பூரணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்டச் செயலாளர் இரா.முல்லையரசு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், தமிழகத்தில் அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ள மத்திய அரசைக் கண்டிப்பது, மாட்டிறைச்சி விற்பனைக்கான தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கண்ணமுத்தாம்பட்டியில் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட காலனி வீடுகளின் மேற்கூரைகள் பழுதாகியிருப்பதை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அப்பகுதியில் குடிநீர், சாக்கடை,கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், செயலாளர் சுப்ரமணி உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT