கரூர்

செங்கல் சூளைக்கு விறகுகளாகும் பனைமரங்கள்

நோய்களைத் தீர்க்கும் கற்பக மரமான பனை மரங்கள் தற்போது செங்கல் சூளைகளுக்கு விறகுகளாக மாறும் அவலத்தைப் போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

DIN

நோய்களைத் தீர்க்கும் கற்பக மரமான பனை மரங்கள் தற்போது செங்கல் சூளைகளுக்கு விறகுகளாக மாறும் அவலத்தைப் போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கற்பக தரு மரமாகவும், தமிழகத்தின் சின்னமாகவும் போற்றப்படும் பனை மரங்கள் நாளுக்கு அழிந்து வருகின்றன. கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் கடந்த 2010-ல் எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 5 கோடி பனைமரங்கள் இருந்ததாகவும்,இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி, ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெற முடியும். ஆண்டுதோறும் ரூ.200 கோடிக்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைத்து வந்த நிலையில் தற்போது பனைத்தொழில் நலிவடைந்து வருகிறது. 1985-86 ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் பேருக்கும், தமிழகத்தில் 5.87 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தந்த இத்தொழிலில் தற்போது 10 சதவீதம் பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இதனால் பனை மரங்கள் போதிய பராமரிப்பின்றி தற்போது செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சமூக ஆர்வலரும், இலக்கியவாதியுமான தென்னிலை இராம.கோவிந்தன் கூறியதாவது: பனைமரங்கள் இயற்கை தந்த வரப்பிரசாதம். பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பதனீர் உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். எலும்புகளையும், கல்லீரலையும் பலப்படுத்தும் தன்மையுடையது. பதனீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, பனஞ்சீனி,பனங்
கற்கண்டு ஆகியவையும் மருத்துவ குணங்கள் கொண்டவை. மேலும் பதனீரில் சர்க்கரை சத்து,கால்சியம், தையாமின், வைட்டமின் சி. நிகோனிக் அமிலம், புரதம் ஆகியவை உள்ளன. பதனீர் எடுக்காத பனைமரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நுங்குகளும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. தொடர்ந்து பதனீரை 40 நாட்கள் குடித்து வந்தால் மேகநோய் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துபோகும். உடல் வீக்கம், வயிற்றுக்கோளாறு, வெள்ளைப்படுதல், வெட்டை நோய்களைக் குணமாக்கவும், சிறுநீர் வெளியேற்றவும் பதனீர் நமக்கு உதவுகிறது.
கருப்பட்டி உடலுக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தி மந்தத் தன்மையைப் போக்குகிறது. மேகநோய், ரத்தசோகை, காய்ச்சல் அம்மைச்சூடு, தண்ணீர் தாகத்துக்கும் கருப்பட்டி மருந்தாகும். பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது. மலச்சிக்கலைத் தீர்க்கக்கூடியது. எலும்புச்சூடு நோய்க்கு சிறந்த நிவாரணி. பனை விசிறிகளும் குளிர்ச்சியைத் தரக்கூடியது.
இப்படி மனிதனின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், உடல் உறுப்புகளை வலிமையாக்கும் மருந்தாகவும் இருக்கும் பனை மரங்கள் இன்று முற்றிலும் அழிவுப்பாதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
இந்தத் தொழில் நாளடைவில் சுவடே இல்லாமல் மறைந்து போகும் நிலை உருவாகியுள்ளது. பனைத் தொழில் புத்துயிர் பெற அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதே பெரும் எதிர்பார்ப்பாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT