கரூர்

இலகுரக வாகன ஓட்டுநர்களுக்கு பயிற்சி முகாம்

கரூரில் ஐஓபி தொழில்முனைவோர் பயிற்சி மையம் மற்றும் ஓம்சக்தி ஓட்டுநர் பள்ளி சார்பில் இலகுரக வாகன ஓட்டுநர்களுக்கு வங்கிகளில் கடனுதவி பெற்று

DIN

கரூரில் ஐஓபி தொழில்முனைவோர் பயிற்சி மையம் மற்றும் ஓம்சக்தி ஓட்டுநர் பள்ளி சார்பில் இலகுரக வாகன ஓட்டுநர்களுக்கு வங்கிகளில் கடனுதவி பெற்று வாகனங்கள் வாங்குவது தொடர்பான பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் தொழில்முனைவோர் பயிற்சி மைய மாநில இயக்குநர் எஸ். கணேசன் பங்கேற்று பயிற்சியளித்தார். முன்னதாக அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் வங்கிகள் மூலம் செயல்படும் 31 தொழில்முனைவோர் பயிற்சி மையங்கள் மூலம் ஆண்டுக்கு 21,000 இளைஞர்களுக்கு 300 வகையான தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இளைஞர்களுக்கு வங்கிகள் மூலம் சுய தொழில்கடனாக ரூ. 20,000 முதல் ரூ. 25 லட்சம் வரை பெற்றுத்தருகிறோம். இதன்மூலம் சமூகத்தில் இளைஞர்கள் பெரும்பாலானோரை தொழில்முனைவோராக மாற்றியுள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில், பயிற்றுநர்கள் சிமியோன், சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓம்சக்தி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி முதல்வர் பி. ராஜாராமன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT