கரூர்

குடிநீர் கோரி மறியல்: போக்குவரத்து பாதிப்பு

கரூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கரூர் - திண்டுக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

DIN

கரூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கரூர் - திண்டுக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டில் முத்துராஜபுரம், நடுத்தெரு, வடக்குத்தெரு உள்ளிட்ட பகுதியினருக்கு கடந்த 19 நாட்களாக காவிரிக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுதொடர்பாக அப்பகுதியினர் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் புதன்கிழமை கரூர் உழவர் சந்தை முன் திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கரூர் நகர காவல் நிலையத்தினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அளித்த உறுதியையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

SCROLL FOR NEXT