கரூர்

கரூரில் இன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூ ரில் வெள்ளிக்கிழமை (செப்.8) பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.

DIN

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூ ரில் வெள்ளிக்கிழமை (செப்.8) பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: போட்டியில் பங்கேற்போர் சொந்தமாக சைக்கிள்  வைத்திருக்க வேண்டும். 13 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 15கி.மீ. தூரமும்,  மாணவிகளுக்கு 10கி.மீ.தூரமும்,  15 வயதுக்குட்பட்ட 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 20 கி.மீ.தூரம்,  மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு 20கி.மீ.தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ.தூரமும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்கும்  மாணவ, மாணவிகள் தங்களது பள்ளித்தலைமை ஆசிரியரிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும். வயதுச் சான்றிதழ் இல்லாமல் வருவோர் போட்டியில் பங்கேற்க முடியாது. போட்டியில் பங்கேற்போருக்கு தினப்படி, பயணப்படி ஏதும் வழங்கப்படாது.
 போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT