கரூர்

குறும்பட கண்காட்சி வாகனம் தொடக்கிவைப்பு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறும்படக் கண்காட்சி வாகனத்தை வியாழக்கிழமை தொடக்கிவைத்தார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.

DIN

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறும்படக் கண்காட்சி வாகனத்தை வியாழக்கிழமை தொடக்கிவைத்தார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
கரூரில் வரும் அக்.4-ம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடைபெறுகின்றன.  விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த விழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட செய்தித் தொடர்புத் துறை சார்பில்  குறும்பட கண்காட்சி வாகனத்தை வியாழக்கிழமை மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை தொடக்கி வைத்து, குறும்படத்தை கண்டு ரசித்தார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்.கீதாமணிவண்ணன்,  மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ்,  அதிமுக நிர்வாகிகள் வி.வி. செந்தில்நாதன், வை. நெடுஞ்செழியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT