சிந்தலவாடி குறுவட்டத்தில் வரும் 28-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிந்தலவாடி குறுவட்ட மக்கள் தொடர்பு முகாம் வரும் 28-ஆம் தேதி லாலாபேட்டை சிவசக்தி மஹாலில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் முகாமில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பாக கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன. எனவே, சிந்தலவாடி கிராம பொதுமக்கள் முகாமில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.