கரூர்

பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா

DIN

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் திங்கள்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த தினத்தை பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் திங்கள்கிழமை (ஜூலை 15) காமராஜர் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளி: விழாவின் தொடக்கமாக வழிபாட்டுக் கூட்டத்தில் காமராசரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
பின்னர் “காமராஜரின் அரும்பணிகள் என்ற தலைப்பிலான சொற்பொழிவில் மாணவர், மாணவிகள் உரையாற்றினர். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் ஆர்த்தி. சு. சாமிநாதன் பரிசு வழங்கினார்.
மலர் மெட்ரிக் பள்ளி: கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு பள்ளித் தாளாளர் பேங்க் கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். 
காமராஜரின் சிறப்புகளை விளக்கிடும் வகையில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.  நெகிழியைத் தவிர்ப்போம், மழைநீரை சேமிப்போம், மரம் நடுவோம், இயற்கை வளத்தை பாதுகாப்போம் என மாணவர்கள் உறுதிமொழியேற்றனர். 
பி.ஏ. வித்யாபவன்: பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழா, காமராஜர் பிறந்தநாள் விழாவுக்கு பள்ளித் தலைவர் அம்மையப்பன் தலைமை வகித்தார். காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. பள்ளியின் துணைத் தலைவர் கேசன், செயலர் சுமதி சிவக்குமரன், தலைமையாசிரியர் சிவகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சேரன் பள்ளி: வெண்ணமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தாளாளர் கே. பாணஅடியன், ஆலோசகர் செல்வதுரை ஆகியோர், தமிழக வளர்ச்சிக்கு காமராஜரின் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகள் குறித்து விளக்கிப் பேசினர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவ, மாணவிகள் நிகழ்த்திய சொற்பொழிவு, நடனம், வில்லுப்பாட்டு, நாடகம் உள்ளிட்டவை நடைபெற்றன.

சிலைக்கு மரியாதை
 காமராஜரின் 117ஆவது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெங்கமேட்டில் உள்ள காமராஜர் சிலை மற்றும் ஜவஹர்பஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாவட்ட தலைவர் ஆர்.சின்னசாமி தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்தனர். உள்வீராக்கியத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு கரூர் நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. கரூர் மாவட்ட அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் பிஎஸ்என் தங்கவேல், நாம் தமிழர் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். குளித்தலை காந்தி சிலை அருகே காங்கிரஸ் சார்பிலும், குளித்தலை பெரியபாலம் பகுதியில் தமாகா சார்பிலும் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு - நேரலை

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள் - 2024

நடிகர் சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

SCROLL FOR NEXT