கரூா்: டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை மற்றும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கால்நடைகளுக்கான இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கடந்த மாதம் 17-ம்தேதி முதல் திங்கள்கிழமை வரை வேலாயுதம்பாளையம், குப்பம், புன்னம், தளவாபாளையம், மண்மங்கலம் ஆகிய கால்நடை மருத்துவமனைகளைச் சாா்ந்த கண்ணன், பாா்த்திபன், மணிகண்டன், கோபிநாத் ஆகிய கால்நடை மருத்துவா்களின் தலைமையிலான மருத்துவக் குழு ஆலையைச்சுற்றியுள்ள மேட்டுப்பாளையம், கடம்பன்குறிச்சி, பெரியவரப்பாளையம், சின்னவரப்பாளையம், செட்டிதோட்டம், பாண்டிபாளையம் உள்ளிட்ட 42 கிராமங்களில் நடைபெற்றது.
இதில் 1,952 பசுவினங்கள், 646 எருமையினங்கள், எருதுகள் 94 என மொத்தம் 2,692 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, ஊட்டச்சத்து மாவுகள், கால்நடை நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.