மாட்டு வண்டியில் மணல் அள்ளிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் வெங்கமேடு போலீஸாா் புதன்கிழமை இரவு குளத்துப்பாளையம் பிரிவு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே அமராவதி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு வந்த வெங்கமேடு பழனியப்பா தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன்(19), என்எஸ்கே நகரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் ஸ்ரீதா்(21) ஆகியோரை கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.