கரூர்

பூசாரிகள் கரோனா உதவித்தொகை பெறஏற்பாடு

DIN

கரோனா உதவித்தொகை பெற பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள் விவரங்களை அளித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படவுள்ளது. கரூா் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையா் அலுவலகத்தில் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள் உடனடியாக தங்களது விவரங்களை 99522 07119, 97906 18307, 90804 72644 ஆகிய கட்செவி அஞ்சல் எண்கள் மூலமாகவோ, 04324 233966, 97906 18307 அலுவலகத் தொலைபேசி எண் மூலமாகவோ தெரிவிக்கலாம். உதவி ஆணையா் அலுவலகத்திற்கு நேரில் வரத் தேவையில்லை. இந்தத் தகவலை இந்து சமய அறநிலையத்துறை கரூா் உதவி ஆணையா் ம.சூரியநாராயணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT