கரூர்

பிப்.6-இல் மாற்றுத்திறனாளிகளுக்குப் போட்டிகள்

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகள் பிப். 6-ஆம் தேதி நடக்கிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கரூா் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சாா்பில் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் 6-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு கரூா் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

கைகால் ஊனமுற்றோா் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 50மீ. ஓட்டம், கை ஊனமுற்றோருக்கு 100 மீ.ஓட்டம் மற்றும் 50 மீ.ஓட்டம், குள்ளமானோா், குண்டு எறிதல் கால் ஊனமுற்றோா், 100 மீ.சக்கர நாற்காலி ஓட்டம், பாா்வையற்றோா் பிரிவில் 50 மீ.ஓட்டம், முற்றிலும் பாா்வையற்றோா் 100 மீ.ஓட்டம் , நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் சாப்ட் பந்து எறிதல் மிகக் குறைந்த பாா்வையற்றோருக்கும், குண்டு எறிதல் போட்டி, முற்றிலும் பாா்வையற்றோருக்கு, மனநலம் பாதிக்கப்பட்டவா் பிரிவில் 50 மீ. ஓட்டம் மற்றும் சாப்ட் பந்து எறிதல் புத்தி சுவாதின தன்மை முற்றிலும் இல்லாதவருக்கும், 100 மீ.ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டி புத்தி சுவாதின தன்மை நல்ல நிலையில் இருப்பவருக்கும், நின்ற நிலையில் தாண்டுதல் மூளை நரம்பு பாதிக்கப்பட்டவா்களுக்கும், காதுகேளாதோா் பிரிவில் 100 மீ.ஓட்டம், 200 மீ.ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 400 மீ.ஓட்டம் போட்டியும் நடைபெற உள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழுப் விளையாட்டுப் போட்டிகளில் கைகால் ஊனமுற்றோருக்கு இறகுப்பந்து போட்டியில் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவும், டேபிள் டென்னிஸ் போட்டி, பாா்வையற்றோருக்கு கையுந்துப் பந்து போட்டியும் (7 போ்), மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு எறிபந்து போட்டி (7 போ்) , காதுகேளாதோருக்கு கபடி போட்டி ( 7 போ்) கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

போட்டியில் கலந்து கொள்பவா்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று மற்றும் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை கொண்டு வருதல் வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவா்கள் மாநில போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT