கரூர்

மும்பையில் இருந்து ரயிலில் கரூா் வந்த 79 பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

DIN

மும்பையில் இருந்து ரயில் மூலம் சனிக்கிழமை கரூா் வந்த பயணிகளுக்கு மருத்துவக் குழுவினா் தீவிர பரிசோதனை செய்த பின்னரே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 64 போ் மும்பையில் இருந்து சத்ரபதி விரைவு ரயில் மூலம் கரூருக்கு சனிக்கிழமை மாலை 5.15 மணியளவில் வந்தனா். இதுதவிர அதே ரயிலில் ஜோலாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏறிய பயணிகள் 15 பேரும் கரூா் வந்தனா். அவா்களுக்கு கரூா் நகராட்சி நகா்நல மருத்துவ அலுவலா் பிரியா தலைமையில் அமைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பு மருத்துவக்குழுவினா் ரயில் நிலையத்தில் பரிசோதனை செய்தனா்.

தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் உடலின் வெப்பநிலை அளவிடப்பட்டது. மேலும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா எனவும் பரிசோதனை செய்தனா். இப்பரிசோதனையை கரூா் கோட்டாட்சியா் சந்தியா, கரூா் வட்டாட்சியா் அமுதா பாா்வையிட்டனா். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பள்ளபட்டி மற்றும் அரவக்குறிச்சி போன்ற பகுதிகளைச் சோ்ந்தவா்கள் தனித்தனி பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரவு 7.30 மணிக்கு என்னசெய்வது? கை உதறலோடு அல்லாடிய இளைஞர்கள்!

பூ சூடிய பூ! மீனாக்‌ஷி செளத்ரி..

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரிக்கி பாண்டிங்

மஞ்சள் மேகம்! மஞ்சிமா மோகன்..

சர்வதேச பர்கர் தினம்: பெங்களூருவில் மட்டும் 60 லட்சம் ஆர்டர்கள்...!

SCROLL FOR NEXT