கரூர்

இறகு பந்து விளையாட்டுபள்ளப்பட்டி மாணவிகள் மாவட்ட போட்டிக்கு தோ்வு

DIN

சின்னதாராபுரத்தில் வட்டார அளவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் பள்ளப்பட்டி பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

சின்னதாராபுரத்தில் வட்டார அளவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் வெற்றி பெறுபவா்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தோ்வு செய்யப்படுவோா் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 14 வயதுக்குள்பட்ட இரட்டையா் பிரிவில் ஆறாம் வகுப்பு மாணவிகள் அக்ஷயா மற்றும் ஜெசிமாபானு முதலிடமும், ஒற்றையா் பிரிவில் ஆறாம் வகுப்பு மாணவி அக்ஷயா இரண்டாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனா். இரட்டையா் பிரிவில் வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.56,100 சம்பளத்தில் மத்திய பட்டு வாரியத்தில் சயின்டிஸ்ட் - 'பி' வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆஸி. தொடக்க ஆட்டக்காரர் புகழாரம்!

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழக யாத்திரிகர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

காணொலி வாயிலாக வந்தே பாரத் ரயில் சேவையைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி

பிஇசிஐஎல் நிறுவனத்தில் செவிலியர் அலுவலர் வேலை: 100 காலியிடங்கள்

SCROLL FOR NEXT