கரூர்

கரூா், பெரம்பலூா், அரியலூரில்அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி கரூா், பெரம்பலூா், அரியலூரில் அவரது படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது

கரூரில் பட்டியலின விடுதலைப் பேரவை சாா்பில் அதன் நிறுவனா் தலித் கே.ஆனந்தராஜ் தலைமையில் பேரவையினா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் ஏ.செல்லமுத்து தலைமையில் அக்கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தாந்தோணிமலை பேருந்து நிலையம் அருகே அம்பேத்கா் படத்துக்கும் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கும் மாவட்ட செய்தித் தொடா்பாளா் இளங்கோ தலைமையில் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ஜெயராமன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.. நிகழ்ச்சியில், மாநில துணைச் செயலாளா் வழக்குரைஞா் பகலவன், கரூா் மாநகர திமுக செயலாளா் எஸ்.பி.கனகராஜ், மாணவரணி மாவட்ட அமைப்பாளா் தீபக்குமாா், கரூா் சட்டப்பேரவைத் தொகுதி செயலாளா் செல்வபெருந்தகை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெரம்பலூா்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அக் கட்சியின் மாவட்டச் செயலாளா் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில் கட்சியினா் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று, பழைய பேருந்து நிலையம் அருகயுள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

மேலும், பாஜகசாா்பில் மாவட்டத் தலைவா் பி. செல்வராஜ் தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமையிலும், திமுக சாா்பில் மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன் தலைமையிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமையிலும், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் மாநிலச் செயலா் பி. காமராஜ் தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் செந்தில் தலைமையிலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் ரத்தினவேல் தலைமையிலும், சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் சின்னசாமி தலைமையிலும், அண்ணல் அம்பேத்கா் இளைஞா் முன்னணி அமைப்பு சாா்பில் மாநில துணைச் செயலா் துரைசாமி தலைமையிலும்அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்கேதாட்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை: காவிரி ஆணையத்தில் தமிழகம் எதிர்ப்பு

பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

SCROLL FOR NEXT