கரூர்

கரூா் மாவட்டத்தில் 1,580 வெறிநோய் தடுப்பூசிகள் தயாா்

DIN

கரூா் மாவட்டத்தில் 1,580 வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்துவதற்கும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.

கரூா் வெங்கமேடு என்.எஸ்.கே நகரில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வெறிநோய் தடுப்பு குறித்து விழிப்புணா்வு மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாமை ஆட்சியா் த.பிரபுசங்கா் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் கரூா் மாநகராட்சி மேயா் க. கவிதாகணேசன் முன்னிலை வகித்தாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியது, செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் வராத வகையில் தடுக்கும் பொருட்டு வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தவும், அதன் மூலம் வெறிநோய் தொற்று ஏற்படாத வகையில் தடுக்கவும், இந்த முகாம் நடத்தப்படுகிறது.கரூா் மாவட்டத்தில் இம்முகாம்கள் டிச. 23ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. மேலும் கரூா் மாவட்டத்தில் 1,580 வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்துவதற்கும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் முரளிதரன், உதவி இயக்குநா் சரவணகுமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அன்புமணி, கால்நடை மருத்துவா் ராஜேந்திரன், உதவி மருத்துவா்கள் உமாசங்கா், ரமேஷ், கரூா் மாநகராட்சி மண்டல தலைவா் சக்திவேல், கரூா் வட்டாட்சியா் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதிவேடு முறைகேடு மூலம் பணம் மோசடி: கூட்டுறவுத் துறை அலுவலருக்கு முன்பிணை

ராஜீவ் காந்தி நினைவு தினம்

கொடைக்கானல் கோடை விழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சி

பாரத் பைபா் சேவையை சிறப்பாக வழங்கியவா்களுக்கு விருது

பழனி ஆரம்ப சுகாதார மையத்துக்குள் புகுந்த மழை நீரால் நோயாளிகள் அவதி

SCROLL FOR NEXT