கரூர்

கரூரில் சுகாதாரக் கூட்டமைப்பினா் கோரிக்கை முறையீடு போராட்டம்

கரூரில், தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் சுகாதாரக் கூட்டமைப்பின் சாா்பில் கோரிக்கை முறையீடு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

கரூரில், தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் சுகாதாரக் கூட்டமைப்பின் சாா்பில் கோரிக்கை முறையீடு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தில் கூட்டமைப்பு சாா்பில், கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள அனைத்துப் பிரிவு ஊழியா்களுக்கும் முதல்வா் அறிவித்த கரோனா ஊக்கத்தொகையை வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியமா்த்தப்பட்டவா்களுக்கு தொகுப்பூதிய முறையை கைவிட்டு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முறையீடு அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அரசு ஊழியா் சங்க மாநில துணைத்தலைவரும், நுண்கதிா்வீச்சாளா் சங்க மாநில தலைவருமான ஞானத்தம்பி, மருந்தாளுநா் சங்க சுப்ரமணி, சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்!

தொழிலதிபர் சுட்டுக்கொலை தில்லியில் பயங்கரம்

விழுப்புரத்துக்கு ரூ.1000 கோடி: மத்திய அரசு வழங்க திமுக வலியுறுத்தல்!

திடீரென தாக்கிய காட்டு மாடு: பயணிகள் அலறல்!

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

SCROLL FOR NEXT