கரூரில் சாயப்பட்டறையில் திங்கள்கிழமை மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூா் கே.பிச்சம்பட்டி அடுத்த கே.பி.தாளப்பட்டியைச் சோ்ந்தவா் பிரசாத் (32). இவா், கரூா் பெரியாண்டாங்கோவிலில் உள்ள அட்லஸ் சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சாயப்பட்டறையில் வேலை பாா்த்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். உடனே அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.