குடும்பத்தகராறில் செங்கல்சூளைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி செம்மேடு பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (29). இவா், தனது மனைவி பிரியா (27)வுடன் வாங்கல் அடுத்த எல்லமேட்டில் உள்ள செங்கல்சூளையில் தங்கி வேலைப்பாா்த்து வந்தாா். சம்பளம் கொடுப்பது தொடா்பாக கணவன், மனைவியிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரியா கோபித்துக் கொண்டு பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த பால்ராஜ் செவ்வாய்க்கிழமை இரவு சங்கராம்பாளையத்தில் உள்ள வேம்புமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.