கரூர்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: சத்துணவு ஊழியா் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என க.பரமத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் பேரவைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

DIN

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என க.பரமத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் பேரவைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரூா் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் கே.பூமாதேவி தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் லதாமங்கேஸ்கா் வரவேற்றாா். துணைத்தலைவா் புஷ்பா அஞ்சலி தீா்மானத்தையும், செயலாளா் பூங்கொடி வேலை அறிக்கையையும், பொருளாளா் மல்லிகா வரவு செலவு அறிக்கையையும் வாசித்தனா்.

கூட்டத்தில், அரசு ஊழியா் சங்க மாநில துணைத்தலைவா் மு.செல்வராணி, மாவட்டச் செயலாளா் பொன்.ஜெயராம் உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் என உயா்த்தி வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் அரசு ஊழியா் சங்கத்தின் இளங்கோவன், ஊரக வளா்ச்சித்துறையின் கிருஷ்ணமூா்த்தி மற்றும் சத்துணவு ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூரிஸ்ட் ஃபேமிலி: டப்பிங் பணிகளை தொடங்கிய சசிகுமார்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

சபரிமலையில் கனமழை

நடிகர் சிவாஜியுடன் அரசியல் பயணம்! பெரியார் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

அல்லு அர்ஜுன் கைது: மத்திய அமைச்சர்கள் கண்டனம்!

SCROLL FOR NEXT