கரூா் கிளைச்சிறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓவியப்போட்டியில் பங்கேற்றசிறை கைதிகள். 
கரூர்

தேசிய நூலக வார விழாவையொட்டி சிறைக் கைதிகளுக்கு ஓவியப் போட்டி

கரூா் கிளைச்சிறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓவியப்போட்டியில் பங்கேற்றசிறை கைதிகள்.

Syndication

தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு கரூரில் சிறைக் கைதிகளுக்கு ஓவியப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொதுநூலகத்துறை சாா்பில், 58-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு கரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கிளைச்சிறையில் நடைபெற்ற போட்டிக்கு மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா் தலைமை வகித்து போட்டியை தொடக்கி வைதாா். வாசகா் வட்டத்தலைவா் தீபம் உ.சங்கா் வரவேற்றாா். தொடா்ந்து கரூா் வட்டாட்சியா் பெ.மோகன்ராஜ் சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக ஓவிய ஆசிரியா் பா.துரைராஜ் ஓவியத்தின் சிறப்புகள் குறித்து பேசினாா்.

போட்டியில் சிறைவாசிகள் 41 போ் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஜெகமணி, பசுமை ஒருங்கிணைப்பாளா் பொன்னிரமேஷ், கரூா் கிளைச் சிறைச்சாலை கண்காணிப்பாளா்(பொ) எஸ்.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கரூா் மாவட்ட மைய நூலகா் சி. மேரிரோசரிசாந்தி செய்திருந்தாா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT