கரூர்

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு நிதியுதவி

தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 30 பேரின் குடும்பத்துக்கு புதுவை மாநில சமூக செயற்பாட்டாளா்கள் புதன்கிழமை நிதியுதவி வழங்கினா்.

தினமணி செய்திச் சேவை

தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 30 பேரின் குடும்பத்துக்கு புதுவை மாநில சமூக செயற்பாட்டாளா்கள் புதன்கிழமை நிதியுதவி வழங்கினா்.

கரூரில் கடந்த 27 -ம் தேதி இரவு தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில் கரூா் நெரிசலில் சிக்கி உயிரிழந்த கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 30 பேரின் குடும்பத்தை புதுவை மாநில சமூக செயற்பாட்டாளரும், ரமா அறக்கட்டளையின் தலைவருமான விக்கி என்கிற ராஜகணபதி நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 20,000- ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினாா்.

அப்போது, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஏழுமலை, திரைப்பட இயக்குநா் ரவிசுப்ரமணியம், திரைப்பட விநியோகப் பிரிவு சென்னை வேல்ராஜ், வழக்குரைஞா் காா்த்திக் ஆகியோா் உடனிருந்தனா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT