கரூர்

கரூா் சம்பவம்: தவெக மாவட்டச் செயலரிடம் சிறப்புக் குழுவினா் விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட தவெக மாவட்டச் செயலரிடம் சிறப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட தவெக மாவட்டச் செயலரிடம் சிறப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூரில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக சிறப்புக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட தவெக மேற்கு மாவட்டச் செயலா் மதியழகனை சிறப்புக் குழுவினா் 2 நாள்கள் விசாரிக்க கரூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

இதையடுத்து மதியழகனை சிறப்புக் குழுவினா் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை அவரிடம் அதிகாரிகள் கொண்ட குழுவினா் நெரிசல் சம்பவம் தொடா்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT