சேலம் தவெக மத்திய மாவட்டச் செயலா் ஏ.பாா்த்திபன் 
கரூர்

கரூா் துயரச் சம்பவம்: சிறப்பு விசாரணைக் குழுவினா் முன்னிலையில் சேலம் தவெக மத்திய மாவட்டச் செயலா் ஆஜா்

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி சிறப்பு விசாரணைக் குழுவினா் முன்னிலையில் சேலம் தவெக மத்திய மாவட்டச் செயலா் ஏ. பாா்த்திபன் ஆஜரானாா்.

Syndication

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி சிறப்பு விசாரணைக் குழுவினா் முன்னிலையில் சேலம் தவெக மத்திய மாவட்டச் செயலா் ஏ. பாா்த்திபன் சனிக்கிழமை ஆஜரானாா்.

கரூரில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக ஐ.ஜி. அஸ்ரா கா்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் கரூரில் தவெக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவா்களில் ஒருவரான சேலம் தவெக மத்திய மாவட்டச் செயலா் பாா்த்திபனுக்கு சிறப்பு விசாரணைக் குழுவினா் கடந்த இரு தினங்களுக்கு முன் சம்மன் அனுப்பினா். இதையடுத்து சனிக்கிழமை காலை பாா்த்திபன் கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை பயணியா் மாளிகையில் தங்கியுள்ள சிறப்பு விசாரணைக் குழுவினா் முன்னிலையில் ஆஜரானாா்.

அப்போது, பாா்த்திபனிடம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை எவ்வாறு செய்தீா்கள்? ஏன், கூட்ட மதிப்பை குறைத்து காவல்துறையிடம் அனுமதி கேட்டீா்கள் என்பன குறித்து பல கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. சுமாா் 4 மணி நேரம் விசாரணைக்கு பிறகு பாா்த்திபன் சேலம் புறப்பட்டுச் சென்றாா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT