கரூர்

இருசக்கர வாகனத்திலிருந்து தடுமாறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

இருசக்கர வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், சேளூா் கந்தம்பாளையம், காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி (58). தேங்காய் வெட்டும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (47). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

இந்த நிலையில் குப்புசாமி செவ்வாய்க்கிழமை மருந்து வாங்குவதற்காக வேலூா் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். பாண்டமங்கலம் அருகே கொளக்காட்டுப்புதூரில் தனியாா் வங்கி அருகே சென்றபோது நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த குப்புசாமியை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி குப்புசாமி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்களில் மழை!

சென்னை: 41 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து! பயணிகள் அவதி!

இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்

விருப்பங்கள் கைகூடும் மீன ராசிக்கு: தினப்பலன்கள்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இண்டி கூட்டணி தீவிரம்!

SCROLL FOR NEXT