கரூர்

கரூா் சம்பவம் தீபாவளி விடுமுறையால் சொந்த ஊருக்கு புறப்பட்டனா் சிபிஐ அதிகாரிகள்

தினமணி செய்திச் சேவை

தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கரூரில் முகாமிட்டிருந்த சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தங்களது சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை இரவு கரூா் வந்தனா். அவா்களிடம் ஆவணங்களை சிறப்பு விசாரணைக் குழுவினா் ஒப்படைத்தனா்.

இதையடுத்து முதல்கட்டமாக நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தது தொடா்பாக வனத்துறையினரிடம் விசாரணை நடத்தினா். பின்னா் சிறப்பு விசாரணைக் குழுவினா் ஒப்படைத்த ஆவணங்களை சனிக்கிழமை சரிபாா்த்தனா்.

இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரை சிபிஐ அதிகாரிகள் நேரில் வரவழைத்து விசாரணை நடத்த முடிவெடுத்திருந்தனா்.

ஆனால், தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த இயலாது எனக் கருதிய சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை தங்களது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கஞ்சா விற்பனை: வட மாநில இளைஞா் கைது

SCROLL FOR NEXT