கரூா்: கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.
கந்த சஷ்டியை முன்னிட்டு கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை மாலை தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து காப்பு கட்டுதல், லட்சாா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து இன்று(வியாழக்கிழமை) உள்பிரகார புறப்பாடும், 27-ஆம்தேதி ஆறுமுகப்பெருமான் கந்தசஷ்டி மகாஅபிஷேகமும், மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரமும், 28-ஆம்தேதி முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்ஸவமும் நடைபெறுகிறது.