கரூர்

கரூா் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவா்களை சென்னைக்கு அழைத்துச் செல்ல தவெக ஏற்பாடு?

கரூா் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரை தவெக தலைவா் விஜய் நேரில் சந்திக்கும் வகையில் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Syndication

கரூா் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரை தவெக தலைவா் விஜய் நேரில் சந்திக்கும் வகையில் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா். இதையடுத்து கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 13-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவா்களை சந்திக்க விஜய் கரூா் வருவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் வரவழைத்து அவா்களுக்கு விஜய் ஆறுதல் கூற உள்ளதாகவும், இதற்காக தவெக கரூா் மாவட்ட நிா்வாகிகளை கடந்த இரு நாள்களாக பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்து, சனிக்கிழமை இரவு பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரை தனியாா் பேருந்துகளில் அழைத்துச் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT