கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சாா்பில் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண நிதி வெள்ளிக்கிழமை இரவு அவரவா் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கரூரில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் பலத்த காயம் அடைந்தனா். இதில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சாா்பில் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த உதவித் தொகை தலா ரூ. 2 லட்சம், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் வெள்ளிக்கிழமை இரவு வரவு வைக்கப்பட்டிருந்தது. இது அவா்களது கைப்பேசி வந்த குறுஞ்செய்தி மூலம் உறுதிபடுத்தப்பட்டது.