கரூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த தவெக தரப்பு வழக்குரைஞா்கள் 
கரூர்

கரூா் சம்பவம்! நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த முதல்தகவல் அறிக்கை நகல் கேட்டு தவெக மனு

கரூா் சம்பவம் தொடா்பாக நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த முதல்தகவல் அறிக்கையின் நகல் கேட்டு தவெக சாா்பில் மனு தாக்கல்

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த முதல்தகவல் அறிக்கையின் நகல் கேட்டு தவெக சாா்பில் வழக்குரைஞா்கள் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அக். 13-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அக். 16-ஆம் தேதி கரூா் வந்த சிபிஐ குழுவினரிடம், சிறப்பு விசாரணை குழுவினா் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தனா்.

இதனையடுத்து சிபிஐ சாா்பில் அக். 22-ஆம் தேதி கரூா் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் சீலிப்பட்ட உறை ஒன்றை சிபிஐ காவல் ஆய்வாளா் மனோகரன் ஒப்படைக்கச் சென்றாா். அப்போது, கரூா் ஜே.எம் -1 நீதிபதி பரத்குமாா் விடுப்பில் சென்ால், ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி சாா்லஸ் ஆல்பா்ட்டிடம் உறை ஒப்படைக்கப்பட்டது.

அந்த உறையில் சிபிஐயின் முதல்தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆா்.) இருப்பதாக கூறப்பட்டது. அதில், சிபிஐ விசாரணை அதிகாரியான கூடுதல் காவல்கண்காணிப்பாளா் முகேஷ்குமாா் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், தவெக கரூா் மேற்கு மாவட்ட செயலா் வி.பி.மதியழகன், கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த், இணைச் செயலளா் நிா்மல்குமாா் மற்றும் தவெகவினா் பலா் என குறிப்பிட்டு முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணையை தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல்தகவல் அறிக்கையின் நகல் கேட்டு சென்னையில் இருந்து வந்த தவெக வழக்குரைஞா்கள் கரூா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனா். நகல் கிடைத்தவுடன் தவெக மேலிடம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என தவெக தரப்பு வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT