பெரம்பலூர்

குரும்பலூர் பாரதிதாசன் பல்கலை. உறுப்பு கல்லூரியில் ஜூன் 14 முதல் கலந்தாய்வு

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 14 முதல் 16 ஆம் தேதி வரை

DIN

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 14 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 14 ஆம் தேதி பி.எஸ்.சி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாட பிரிவுகளுக்கும், 15 ஆம் தேதி பி.லிட் தமிழ், பி.காம் வணிகவியல், பி.பி.ஏ மேலாண்மையியல், பி.எஸ்.ஸி நுண்ணுயிரியல், உயிர் தொழில்நுட்பவியல் ஆகிய பாட பிரிவுகளுக்கும், ஜூன் 16 ஆம் தேதி பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, சுற்றுலா பயண மேலாண்மையியல், பி.எஸ்.டபள்யூ சமூகப்பணி ஆகிய பாட பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் வேலை நேரம் முடியும் வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் டிசி, மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ் நகல்களை கொண்டு வர வேண்டும். கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பெற்ற மதிப்பெண் தர வரிசை அடிப்படையில் சேர்க்கை உறுதி செய்யப்படும். அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் நேரில் பங்கேற்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

காற்றின் எடையும் இடையும்... ஸ்ரேயா!

SCROLL FOR NEXT