பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 61.3 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளை, ஆந்திரப் பிரதேச மாநில ஊரக வளர்ச்சித் துறை துணை ஆணையர் து. சுனீதா தலைமையிலான குழுவினர் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எசனை பகுதியில் ரூ. 87,500 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காளான் உற்பத்தி மையம், ரூ. 1.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வெங்காயக் கொட்டகை, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அன்னமங்கலம் பகுதியில் ரூ. 99,900 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பண்ணைக் குட்டை, ரூ. 4.95 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், ரூ. 21.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நாற்றங்கால், ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய கிணறு, ரூ. 1.98 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பரன் மேல் ஆடுகள் வளர்க்கும் கொட்டகை, ரூ. 1.98 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மாட்டுக் கொட்டகை, ரூ. 90 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மண்புழு உரம் தயாரித்தல், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், சாத்தனூர் மற்றும் மேலமாத்தூர் பகுதிகளில் ரூ. 15.55 மதிப்பீட்டில் நடப்பட்ட மரக்கன்றுகள், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் வரகூர் பகுதியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடம் என ரூ. 61.03 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை தொடர்பான கலந்துரையாடல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இணையதள பதிவேற்றம், நிதி பரிவர்த்தனை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, திட்ட இயக்குநர் ஸ்ரீதர், உதவி திட்ட அலுவலர் கல்யாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.