பெரம்பலூர்

தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 அரசு  பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து, பள்ளித் தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 அரசு  பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து, பள்ளித் தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், அரசு பொதுத்தேர்வில் தங்களது பள்ளி பெற்ற தேர்ச்சி வீதம் குறித்து ஒவ்வொரு பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமும் தனித்தனியாக கேட்டறிந்து, தேர்ச்சி வீதம் குறைந்திருந்தால் அதற்கான காரணம் குறித்தும், இந்தக் கல்வியாண்டில் அதை உயர்த்துவதற்கான ஆலோசனைகளும் அளித்தார். மேலும், 2017- 2018 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் 27 வகையான செயல்பாடுகள் குறித்து வகுப்பறைக் கையேட்டில் உள்ளதை, பள்ளிகளில் கால அட்டவணையின்படி செயல்படுத்த வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார் ஆட்சியர் நந்தகுமார்.  கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி, மாவட்டக் கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மணிவண்ணன், பிரேம்குமார் மற்றும் 85 அரசு, ஆதிதிராவிட நல உயர், மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT