பெரம்பலூர்

தொழில் கடன்பெற விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில்  பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழிற்கடன் பெற விரும்புவோர் ஆன்லைன் மூலம்

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில்  பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழிற்கடன் பெற விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
குறுந்தொழில்கள் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், பிரதம மந்தரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம், கதர் கிராம தொழில் ஆணையர், கதர் கிராம தொழில் வாரியம்  மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற்று சுயதொழில் செய்ய விரும்பும் பயனாளிகள் h‌t‌t‌p://‌w‌w‌w.‌k‌v‌i​c‌o‌n‌l‌i‌n‌e.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரையிலும் வங்கி கடன் வசதி செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ. 10 லட்சத்துக்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், சேவைப் பிரிவின் கீழ் ரூ. 5 லட்சத்துக்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் மாவட்டத் தொழில் மையம் மூலமாகவும், கிராம பகுதிகளில் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியம் மூலமாகவும் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பு நிதியாண்டில் மாவட்டத் தொழில்மையம் மூலம் மானியத்துக்காக ரூ. 111.50 லட்சமும், 440 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT