பெரம்பலூர்

பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில்

DIN

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த 430 பேர் ஈடுபட்டதால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை 1.4.2013 முதல் தொடர அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அதற்கு முன்னதாக ஓய்வூதிய மாற்றத்தில் உள்ள முரண்களைக் களைந்து சீரமைக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் 8-வது ஊதிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மேலும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியங்களை ரத்துசெய்து, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8-வது ஊதியக்குழு மாற்றம் ஏற்படுத்தும் வரை 1.1.2016 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
வேலை நிறுத்தம்:
அதன்படி, ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த 413 அரசு ஊழியர்கள், 17 ஆசிரியர்கள் என மொத்தம் 430 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறைந்த அளவிலான அலுவலர்களே பணியாற்றியதால் அனைத்து அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டதோடு,  பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.  
சாலை மறியல்:
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, அரசு ஊழியர் சங்கத் தலைவர் கி. ஆளவந்தார் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத் துணைத் தலைவர் பி. தயாளன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டமும், சாலை மறியலும் நடைபெற்றது.  ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் உள்பட மறியலில் ஈடுபட்ட 110 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT