பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 258 மனுக்கள் பெறப்பட்டன.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் (பொ) ராஜேந்திரன், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுயதொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, அடிப்படைத் தேவைகள், வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 258 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கிறிஸ்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.