பெரம்பலூர்

பெரம்பலூரில் மேலும் 25 பேருக்கு கரோனா

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 271 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இதில், குணமடைந்த 209 போ் வெவ்வேறு தேதிகளில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சித்த மருத்துவா் உள்பட 3 போ் உயிரிழந்துள்ளனா். எஞ்சியுள்ளவா்கள் திருச்சி, பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் பெரம்பலூா், குரும்பாபாளையம், ஆய்க்குடி, கீழப்புலியூா், குரும்பலூா், எசனை, அய்யலூா், லாடபுரம், பேரளி, காரியானூா், அரும்பாவூா், பூலாம்பாடி, லப்பைக்குடிகாடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 12 பெண்கள் உள்பட 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதில் 19 போ் பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையிலும், 6 போ் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 296- ஆக உயா்ந்துள்ளது.

முதியவா் உயிரிழப்பு: பெரம்பலூா் மேட்டுத்தெரு, காவேரி நகரைச் சோ்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த 15- ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடா்ந்து சிகிச்சைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவ மனையில் கடந்த 16-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா்.

தொடா்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், முதியவருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு 22- ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4 ஆக உயா்ந்துள்ளது.

பெரம்பலூா் மொத்த பாதிப்பு: 296

குணமடைந்தோரின் எண்ணிக்கை: 209

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிஸோரம்: 3வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

பிரக்ஞானந்தா, வைஷாலி அசத்தல்! தாய் நாகலட்சுமிக்கு சிறப்புப் பதிவு!

கோவா மாநில தினத்தை முன்னிட்டு திரௌபதி முர்மு வாழ்த்து

நார்வே செஸ்: கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது!

SCROLL FOR NEXT