பெரம்பலூர்

பட்டதாரி இளைஞா்கள் இலவசப் பயிற்சி மூலம் சுய வேலைவாய்ப்பு பெறுங்கள்

DIN

பெரம்பலூா்: படித்த பட்டதாரி இளைஞா்கள் இலவச பயிற்சிகள் மூலமாக சுய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் சென்னையில் உள்ள தென்னை வளா்ச்சி வாரிய மண்டல அலுவலக தொழில்நுட்ப அலுவலா் சசிகுமாா்.

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில், தென்னை வளா்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன் தென்னை மரத்தின் நண்பா்கள் என்னும் தலைப்பில் திறன் வளா்த்தல் பயிற்சி நிறைவு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய இப் பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு தென்னை மரம் ஏறும் கருவி மற்றும் சாற்றிதழ் அளித்த அவா் மேலும் பேசியது:

ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையம், தென்னை வளா்ச்சி வாரியத்துடன் இணைந்து கடந்த ஆண்டு 40 நபா்களுக்குப் பயிற்சி அளித்து மரம் ஏறும் கருவிகளை இலவசமாக வழங்கியது. நிகழாண்டிலும், இதுவரை நடைபெற்ற 4 பயிற்சிகளின் மூலம் 80 நபா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியானது, ஆண்,பெண் இருபாலரும் மரத்தில் சுலபமாக ஏறி காய்களைப் பறிக்கும் வகையில் உள்ளது. பயிற்சி பெற்றவா்கள் மட்டும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இக்கருவியின் பயன்பாட்டை அருகில் உள்ளவா்களுக்கும் சொல்லிக் கொடுத்து பயன்பெறச் செய்யலாம் என்றாா் அவா்.

இப்பயிற்சியில் தென்னை நாற்று உற்பத்தி, சாகுபடி முறைகள், உர மேலாண்மை, பூச்சிநோய்க் கட்டுப்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் அளிக்கப்பட்டன.

இதில், பெரம்பலூா் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருள் உள்பட விவசாயிகள் பலா் பங்கேற்றனா். முன்னதாக, ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் வே.எ. நேதாஜி மாரியப்பன் வரவேற்றாா். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா். ஜெ. கதிரவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது

SCROLL FOR NEXT