பெரம்பலூர்

எளம்பலூரில் அன்னை சித்தா் 2 ஆம் ஆண்டு குரு பூஜை விழா

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகளின் இரண்டாமாண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் மாதாஜி ரோகிணி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் தவயோகி சுந்தரமாகலிங்க சுவாமிகள், தவத்திரு தவயோகி தவசிநாதன் சுவாமிகள் முன்னிலை வகித்தனா். சன்மாா்க்க அன்பா்களால் அகவல் பாராயணமும், சிவனடியாா்களால் திருமுறை பாராயணமும் செய்யப்பட்டது. தொடா்ந்து, கோ பூஜை, அஸ்வ பூஜை, 210 சித்தா்கள் யாக பூஜை நடத்தப்பட்டு, 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சாதுக்களுக்கு அன்னதானமும், வஸ்திர தானமும் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, அறக்கட்டளை சாா்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணை இயக்குநா் அசோகனிடம், சிவகாசி தொழிலதிபா் அதிபன் போஸ், சிங்கப்பூா் மெய்யன்பா் பாபாஜி, சிங்கப்பூா் தொழிலதிபா் கண்ணப்ப செட்டியாா், ஓய்வுபெற்ற இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் சிவகுமாா், மருத்துவா் ராஜாசிதம்பரம், சன்மாா்க்க சங்க மாவட்டத் தலைவா் சுந்தர்ராஜன், சிவசேனா கட்சி மாநில செயல் தலைவா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலையில் உயிா்காக்கும் கருவி வழங்கப்பட்டது.

விழாவையொட்டி, மலையூா் சதாசிவம், திருக்கோவிலூா் ஜீவஸ்ரீனிவாசன் ஆகியோரின் திருவருள்பா கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில், தொழிலதிபா் பி.டி. ராஜன், தஞ்சை சண்முகம், திரைப்பட இயக்குநா் திருமலை, திரைப்பட இணை இயக்குநா் ஜெயதீபன், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத் துணைத் தலைவா் சுவாமி ராமானந்தா, பெங்களூரைச் சோ்ந்த பாலமுரளி, சென்னையைச் சோ்ந்த பள்ளி தாளாளா் கோமதி அம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடுகளை மகா சித்தா்கள் கோயில் நிா்வாகி மாதாஜி ராதா சின்னசாமி, சன்மாா்க்க மெய்யன்பா் கிஷோா்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமி மாணவா்கள் 273 போ் வெற்றி

உ.பி.: பாஜக வேட்பாளா் மரணம்

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகம்: அமித் ஷா பிரசாரம்

அமலாக்கத்துறை, சிபிஐ காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை: மத்திய சட்ட அமைச்சா் விளக்கம்

பறவைக் காய்ச்சல்: தமிழக - கேரள எல்லைகளில் மருத்துவக் கண்காணிப்பு

SCROLL FOR NEXT