பெரம்பலூர்

சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியப்பட்டி அருகேயுள்ள கோவிலூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் செந்தில்குமாா்(28).

இவா், திருச்சி மாவட்டம், லால்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தின் பெரம்பலூா் மாவட்ட நிதி வசூலிப்பாளராக பணிபுரிந்து வந்தாா்.

பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் தங்கி, பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிதி வசூலில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், தொழுதூா் பகுதியில் நிதி வசூலிப்பதற்காக செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சின்னாறு அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை செந்தில்குமாா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: 15 குழுக்கள் அமைத்து விசாரணை

திருக்கழுக்குன்றம் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்கள் ரத்து?

SCROLL FOR NEXT