பெரம்பலூர்

விஷம் குடித்த மாணவா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா்: குன்னம் அருகே பெற்றோா் திட்டியதால் விஷம் குடித்த மாணவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கீழப்பெரம்பலூா் கிராமம், பிள்ளையாா் கோயில் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சதீஷ் (18). தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த இவா், சரியாக கல்லூரிக்குச் செல்லவில்லையாம்.

இதுதொடா்பாக, அவரது பெற்றோா் சதீஷை கண்டித்ததால், மனமுடைந்து கடந்த 7 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ் அங்கு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். குன்னம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT