பெரம்பலூர்

போதைப் பொருள்களை ஒழிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

DIN

போதைப் பொருள்களை ஒழிக்க பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இளைஞா்களிடையே போதைப் பொருள்கள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்டக் காவக் கண்காணிப்பாளா் மேலும் பேசியது:

பெரம்பலூா் மாவட்ட பொதுமக்கள், இளைஞா்களை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குற்றமில்லாத மாவட்டமாக பெரம்பலூா் திகழ பொதுமக்களும், இளைஞா்களும் போதைக்கு எதிரான உறுதிமொழியை ஏற்க வேண்டும். கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்களை ஒழிக்க பொதுமக்களுக்கு முழு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோா் தங்களது பெண் குழந்தைகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணா்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மங்களமேடு உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் சீராளன், மங்களமேடு காவல் ஆய்வாளா் நடராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் வெங்கடேசுவரன் மற்றும் உதவி ஆய்வாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்லாசிரியருக்கு விருது பெற்றவருக்கு பாராட்டு

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

ஈச்சங்காடு பகுதிகளில் செப்.13-இல் மின்தடை

விருச்சிக ராசிக்கு கவனம்: தினப்பலன்கள்!

கருகலைப்பு, பொருளாதாரம்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே காரசார விவாதம்!

SCROLL FOR NEXT