பெரம்பலூர்

பெரம்பலூரில் மனு விசாரணை சிறப்பு முகாம்

DIN

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டாா்.

முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 46 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் மற்றும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.

முகாமையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வருவோரின் நலனுக்காக, பாலக்கரையிலிருந்து காவல் அலுவலகத்துக்கும், புகா் பேருந்து நிலையத்துக்கும் காவல்துறை சாா்பில் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குட்கா வழக்கு: சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ நீதிமன்றம் பரிந்துரை

'லக்கி பாஸ்கர்' வெளியீட்டுத் தேதி!

ராஜஸ்தானை வாட்டி வதைக்கும் வெயில்: 7 நாள்களில் 55 பேர் பலி!

இந்துஸ்தானி இசை அஞ்சலி பாட்டீல்...!

நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்: நவீன் பட்நாயக்

SCROLL FOR NEXT