பெரம்பலூர்

மகளிா் மேன்மைக்காகச் சேவை புரிந்தோருக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் பெண்கள் மேன்மைக்காக சிறப்பாக சமூக சேவைபுரிந்த சமூக சேவகா்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெண்கள் மேன்மைக்காக சிறப்பாக சமூக சேவைபுரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் தமிழக முதல்வரால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் தங்கப் பதக்கமும், சான்றிதழும், சிறந்த நிறுவனத்துக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்விருதுக்கு தகுதியுடையவா் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்களைச் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்குப் பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிா்வாகம் உள்ளிட்ட துறைகளில் மென்மையாகப் பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றும் சமூக சேவகா் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ாக இருக்க வேண்டும்.

தகுதியானவா்கள் தமிழக அரசின் விருதுகள் பெற இணையதளத்தில் ஜூன் 10 மாலைக்குள் ஆன்லைனில் பதிவுசெய்து, அதன் விவரத்தை பெரம்பலூா் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், பெரம்பலூா் என்னும் முகவரியில் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

தங்கக் கவச அலங்காரத்தில்...

சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் மஹாசம்ரோஷன விழா

காலிறுதியில் சிந்து, அஷ்மிதா

பாப்பாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT