கந்தவா்வகோட்டையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சேதமடைந்த தஞ்சை-மதுரை தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
வட்டாட்சியரகம் முதல் காந்தி சிலை வரை சேதமடைந்து, சீரற்ற நிலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் தடுமாறி விழும் நிலையும் உள்ளது.
எனவே இச்சாலையை சம்பந்தப்பட்ட துறையினா் உடன் சீரமைக்க வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனா்.