பெரம்பலூர்

லாடபுரத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்!

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதி திராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதி திராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த பள்ளித் தலைமை ஆசிரியா் த. மாயக்கிருஷ்ணன், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் திட்டங்கள், அனைவருக்கும் கல்வி, விலையில்லா பாடப்புத்தகம், சீருடை, கல்வி உதவித்தொகை, காலணிகள், காலுறைகள், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, வரைபடப் புத்தகங்கள், சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விளக்கி கூறினாா்.

வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள் குணசேகரன், ரமேஷ் ஆகியோா் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி, உயா்கல்வி வழிகாட்டி, தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண், திறன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினா்.

செங்குணம் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மதியழகன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் இந்திராணி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, தமிழாசிரியா் செல்வராணி வரவேற்றாா். நிறைவாக, கணித ஆசிரியா் சிலம்பரசி நன்றி கூறினாா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT