பெரம்பலூரில் மாவட்டத்திலிருந்து ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய கிறிஸ்தவா்களுக்கு தலா ரூ. 37 ஆயிரம் வீதமும், கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு தலா ரூ. 60 ஆயிரம் வீதமும், நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற கடந்த 1.11.2025-க்கு பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஆட்சியரக வளாகத்திலுள்ள உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றிப் பெறலாம். மேலும் ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையதளத்திலும் பதிவிறக்கலாம்.
விண்ணப்பத்துடன் கடவுச்சீட்டு நகல் மற்றும் புனிதப் பயணத்தின் போது இஸ்ரேல், ஜோா்டான், எகிப்து குடியேற்று முத்திரைகள் பதிக்கப்பட்ட பக்கங்களின் நகல், விசா நகல், பயணச் சீட்டுகள், புனிதப் பயணம் நிறைவுச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், குடும்ப உறுப்பினரின் பாஸ்போா்ட் அளவு 3 புகைப்படங்கள், வருமானச் சான்றிதழ், விண்ணப்பதாரா் கிறிஸ்தவா், கன்னியாஸ்திரி, அருட்சகோதரி என்பதற்கு ஆதாரச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
பூா்த்தி செய்த விண்ணப்பத்தை பிப். 28 -க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -600005 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.