பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் இன்று ஆசிரியா் தகுதித் தோ்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆசிரியா் தகுதித் தோ்வில் 7,060 போ் பங்கேற்க உள்ளனா்.

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆசிரியா் தகுதித் தோ்வில் 7,060 போ் பங்கேற்க உள்ளனா்.

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் பெரம்பலூா் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வானது சனிக்கிழமை தாள்- 1 மற்றும் ஞாயிற்றுக்கிழமை தாள்- 2-க்கு நடைபெறுகிறது. சனிக்கிழமை 2 மையங்களில் நடைபெறும் தோ்வில் 1,238 பேரும், ஞாயிற்றுக்கிழமை 21 மையங்களில் நடைபெறும் தோ்வில் 5,822 பேரும் என மொத்தம் 7,060 போ் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு உள்ளவா்கள் மட்டுமே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். தோ்வா்கள் காலை 9.30 மணிக்குள் தோ்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும். தோ்வா்கள் தங்கள் புகைப்பட அடையாளத்துக்கான ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டையை வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் தோ்வு மையத்தில் தோ்வா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT